ADDED : டிச 27, 2025 03:48 AM

ஒட்டாவா: கனடாவில், ஒரே வாரத்தில் இரண்டு இந்தியர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவுக்கு, வேலை மற்றும் படிப்புக்காக லட்சக்கணக்கான இந்தியர்கள் சென்றுள்ளனர். அங்கு, இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்தபடி உள்ளது. டொரான்டோ பல்கலையில் மூன்றாம் ஆண்டு முனைவர் பட்டப்படிப்பு படித்த ஷிவாங்க் அவஸ்தி, 20, என்ற மாணவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப் பதிந்த போலீசார், குற்றவாளியை தேடி வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன் தான், டொரான்டோவைச் சேர்ந்த ஹிமான்ஷி குரானா என்ற இந்திய பெண் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில், அப்துல் கபூரி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், மற்றொரு இந்திய மாணவரும் கொலை செய்யப்பட்டிருப்பது, கனடாவில் வசிக்கும் இந்தியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

