/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
துாசூர் ஏரியில் கலந்து வரும் கழிவு நீரால் குடிநீர் பாதிப்பு
/
துாசூர் ஏரியில் கலந்து வரும் கழிவு நீரால் குடிநீர் பாதிப்பு
துாசூர் ஏரியில் கலந்து வரும் கழிவு நீரால் குடிநீர் பாதிப்பு
துாசூர் ஏரியில் கலந்து வரும் கழிவு நீரால் குடிநீர் பாதிப்பு
ADDED : ஏப் 20, 2024 08:11 AM
எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியன், துாசூர் ஏரியில் இந்தாண்டு மழைநீர் இல்லாமல் கழிவுநீர் மட்டுமே கலப்பதால் குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
எருமப்பட்டி யூனியன், துாசூரில், 270 ஏக்கரில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கடந்த, 3 ஆண்டாக கொல்லிமலையில் பெய்த கன மழையால் ஏரி நிரம்பி வந்தது. இந்தாண்டு கொல்லிமலையில் போதிய மழை இல்லாததால், ஏரிக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. ஆனால், ஏரியில் நாமக்கல் நகராட்சி கழிவுநீர் தொடர்ந்து கலப்பதால், ஏரி முழுதும் தண்ணீர் உள்ளது. ஆனால், இந்தாண்டு ஏரியில் உள்ள தண்ணீரில், மழை நீர் கலக்காமல் வெறும் கழிவு நீர் மட்டும் ஏரிக்கு செல்வதால் இந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் மாசடைந்து வருவதாக, இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, ஜங்களாபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் கூறியதாவது: நாமக்கல் நகராட்சியில் இருந்து வரும் கழிவுநீர் சுத்திகரிக்காமல் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால், வேட்டாம்பாடி ஏரி முதல் துாசூர் வரை செல்லும் கழிவு நீர் பச்சை நிறத்தில் செல்கிறது. கடந்த, 3 ஆண்டாக ஏரியில் மழை நீருடன் கழிவு நீர் கலந்ததால் பெரியளவில் பாதிப்பு தெரியாமல் இருந்தது. தற்போது, வெறும் கழிவுநீர் மட்டும் கலப்பதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

