நீண்ட கால மோதலுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்; முப்படை தளபதி அனில் சவுகான் பேச்சு
நீண்ட கால மோதலுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்; முப்படை தளபதி அனில் சவுகான் பேச்சு
ADDED : டிச 23, 2025 04:51 PM

புதுடில்லி: நீண்ட கால மோதலுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என முப்படை தளபதி அனில் சவுகான் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து முப்படை தளபதி அனில் சவுகான் கூறியதாவது: இந்தியா அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். நமது இரண்டு எதிரிகளும் அணு ஆயுதங்கள் கொண்ட நாடுகள் என்பதால், ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை போன்றவைக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். பயங்கரவாதத்தைத் தடுக்க குறுகிய கால, அதிக தீவிரம் கொண்ட மோதல்களை எதிர்த்துப் போராட வேண்டும்.
நிலத்தை மையமாகக் கொண்ட, நீண்ட கால மோதலுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும், ஏனென்றால் நமக்கு நிலப்பிரச்னைகள் உள்ளன. இருப்பினும், அதைத் தவிர்க்க நாம் முயற்சி செய்ய வேண்டும். ராணுவ விவகாரங்களில் மூன்றாவது புரட்சியின் உச்சத்தில் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் இப்போது போரில் தாக்கத்தை ஏற்படுகின்றன.
இது ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் தெளிவாகத் தெரிந்தது. நான்கு நாட்கள் மட்டுமே நீடித்த போரில், இந்தியாவுக்கு தீர்க்கமான வெற்றியைப் பெற்றுத் தந்தது.அனைத்து போர் உபகரணங்களும் ஒரே நேரத்தில் அதிக அளவு வேகத்துடன் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு அனில் சவுகான் பேசினார்.

