/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குளத்தில் விடுதி கழிவுநீர் விடுவதை தடுக்க மனு
/
குளத்தில் விடுதி கழிவுநீர் விடுவதை தடுக்க மனு
ADDED : செப் 11, 2025 02:23 AM
காஞ்சிபுரம்:கருமார் குளத்தில் விடுதி கழிவுநீர் விடுவதை தடுக்க வேண்டும் என, கிராம மக்கள் சுகாதாரத் துறையினருக்கு மனு அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து, தென்னேரி கிராம மக்கள் சுகாதாரத் துறை அதிகாரிக்கு அனுப்பிய மனுவில் கூறியதாவது:
வாலாஜாபாத் ஒன்றியம், தென்னேரி கிராமத்தில், தனி நபருக்கு சொந்தமான விடுதி கட்டடம் இயங்கி வருகிறது. இந்த கட்டடத்தில், வட மாநில தொழிலாளர்கள் தங்கி வருகின்றனர். இந்த விடுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை, கருமார் குளத்தில் நேரடியாக விடுகின்றனர்.
இதனால், கருமார் குளத்தில் இருக்கும் தண்ணீர் மாசு ஏற்படுவதோடு, அந்த பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
எனவே, சுகாதாரத் துறையினர் கண்காணித்து, தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.