/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நிறுத்தப்பட்ட அரசு பஸ் சேவையை மீண்டும் இயக்க பயணியர் கோரிக்கை
/
நிறுத்தப்பட்ட அரசு பஸ் சேவையை மீண்டும் இயக்க பயணியர் கோரிக்கை
நிறுத்தப்பட்ட அரசு பஸ் சேவையை மீண்டும் இயக்க பயணியர் கோரிக்கை
நிறுத்தப்பட்ட அரசு பஸ் சேவையை மீண்டும் இயக்க பயணியர் கோரிக்கை
ADDED : செப் 09, 2025 10:09 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூரில் இருந்து, செங்கல்பட்டுக்கு இயக்கப்பட்டு வந்த பஸ் சேவையை மீண்டும் இயக்க பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் இருந்து, தடம் எண் டி60 வழித்தட பேருந்து தினமும் காலை 8:10 மணிக்கு செங்கல்பட்டுக்கு இயக்கப்பட்டு வந்தது.
இப்பேருந்து, தினமும் செங்கல்பட்டுக்கு காலை ஒரு நடை மட்டும் இயக்கப்பட்டது. இந்த பேருந்தை பயன்படுத்தி, உத்திரமேரூர், நெல்வாய் கூட்டுச்சாலை, புக்கத்துறை கூட்டுச்சாலை ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தினமும் செங்கல்பட்டுக்கு சென்று வந்தனர்.
இந்நிலையில், இப் பேருந்து கொரோனா தொற்று காலத்தில் நிறுத்தப்பட்டது. அதிலிருந்து இன்றுவரை இப்பேருந்து இயக்கப் படாமல் உள்ளது.
இதனால், காலை நேரங்களில் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும் பேருந்து இல்லாததால் பயணியர் சிரமப்படுகின்றனர்.
சென்னை, தாம்பரத்திற்கு ரயிலில் வேலைக்கு செல்வோர், குறித்த நேரத்திற்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
எனவே, நிறுத்தப்பட்ட, டி60 பேருந்து சேவையை மீண்டும் துவக்க, போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.