/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஸ்ரீபெரும்புதுார் ஏரி கால்வாயில் துார்வாரும் பணி தீவிரம்
/
ஸ்ரீபெரும்புதுார் ஏரி கால்வாயில் துார்வாரும் பணி தீவிரம்
ஸ்ரீபெரும்புதுார் ஏரி கால்வாயில் துார்வாரும் பணி தீவிரம்
ஸ்ரீபெரும்புதுார் ஏரி கால்வாயில் துார்வாரும் பணி தீவிரம்
ADDED : அக் 17, 2024 01:01 AM

ஸ்ரீபெரும்புதுார்,:ஸ்ரீபெரும்புதுாரில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது. இந்த ஏரி நிரை பயன்படுத்தி, ஸ்ரீபெரும்புதுாரில் 700 ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்யப்படுகிறது. ஏரியில் இருந்து விவசாய நிலத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாய், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சிக்குட்பட்ட டி.கே.நாயுடு நகர் வழியாக செல்கிறது.
இந்த கால்வாயை பொதுப்பணித் துறையினர், முறையாக துார்வாரி பராமரிக்கவில்லை. இதனால், செடி, கொடிகள் படர்ந்து காய்வாய் துார்ந்துள்ளது.
இந்த நிலையில், தற்போது பெய்துவரும் மழையால், கால்வாயில் மழைநீர் செல்ல வழியின்றி, டி.கே. நாயுடு நகர் குடியிருப்புகளை சூழ்ந்தது. மேலும், தொடர்ந்து மழை அதிகரித்தால், ஏரியில் இருந்து மழைநீர், கால்வாய் வழியே வெளியேற்றப்படும். இதனால், குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையும்.
இதையடுத்து, கால்வாயில் உள்ள செடி, கொடிகளை ஜே.சி.பி., இயந்திரத்தின் வாயிலாக அகற்றும் பணியின் ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

