/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குளிர்பானம் குடித்த 5 வயது சிறுமி பலி
/
குளிர்பானம் குடித்த 5 வயது சிறுமி பலி
ADDED : ஆக 12, 2024 03:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்யாறு : திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் கனிகிளிப்பைச் சேர்ந்தவர் ராஜ்குமார்; விவசாயி. இவரது மகள் கவிஸ்ரீ, 5. வீட்டில் வைத்திருந்த உள்ளூர் தயாரிப்பு குளிர்பானத்தை, கவிஸ்ரீ நேற்று காலை குடித்துள்ளார்.
சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி, மூக்கு மற்றும் வாயில் நுரை வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த பெற்றோர், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிறுமி உயிரிழந்தார். துாசி போலீசார் விசாரிக்கின்றனர்.

