ADDED : செப் 09, 2025 09:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார் அருகே ஆடுகளை திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலுார் அடுத்த செங்கமேடு, பாறை தெருவை சேர்ந்தவர் செங்கான் மகன் அருணாச்சலம், 38; செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 6ம் தேதி ஆடுகளை மேய்ச்சல் முடிந்து மாலை 6 மணிக்கு ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றார். காலையில் எழுந்து பார்த்த போது 4 ஆடுகள் திருடப்பட்டது தெரிய வந்தது.
இது குறித்து அருணாச்சலம் கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து அதே கிராமத்தைச் சேர்ந்த கோபால் மகன் அர்ஜூன், 23; சீனிவாசன் மகன் காமராஜ், 49; ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.