/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
செல்வகணபதி கோவில் கும்பாபிஷேகம்
/
செல்வகணபதி கோவில் கும்பாபிஷேகம்
ADDED : டிச 15, 2025 05:46 AM

தியாகதுருகம்: தியாகதுருகம் மவுண்ட் பார்க் சி.பி.எஸ்.இ., பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட மகா செல்வகணபதி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
தியாகதுருகம் மவுண்ட் பார்க் சி.பி.எஸ்.இ., பள்ளி வளாகத்தில் புதிதாக மகா செல்வகணபதி கோவில் கட்டப்பட்டது. இதன் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் துவங்கியது. தாளாளர் மணிமாறன் தலைமையில் சிவாச்சாரியார்கள் ராஜசேகரன், பாண்டுரங்கன் ஆகியோர் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் நடந்தன. அங்குரார்பனம், கோ பூஜை, அஸ்டபந்தனம் சாற்றுதல், கலச பூஜைகள் நடந்தன.
நேற்று காலை 9:45 மணிக்கு கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்த பின்னர் கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
அதைத்தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடந்தது.
பள்ளி முதல்வர்கள் கலைச்செல்வி, சுஜாதா, துணை முதல்வர் முத்துக்குமரன், தலைமை ஆசிரியை டயானா, இயக்குனர்கள் ராஜசேகர், பழனி, வேலு, முன்னாள் கவுன்சிலர் அபரஞ்சி, மூர்த்தி, அமுதா, செல்வம், முரசொலி மாறன், முரளி, மோகன், சசி, ஸ்தபதி அய்யனார் உட்பட ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

