ADDED : டிச 15, 2025 05:47 AM
சங்கராபுரம்: சங்கராபுரம் ரோட்டரி கிளப், கோவை சங்கரா கண் மருத்துவ மையம், நாகராணி ஜவுளி ஸ்டோர் சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் டி.எம். பள்ளி வளாகத்தில் நடந்தது. ரோட்டரி கிளப் துணை தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். ரோட்டரி முன்னாள் துணை ஆளுநர்கள் முத்துக்கருப்பன், திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைவர் ரகுநந்தன் வரவேற்றார்.
ராஜேஷ், வினோத் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். முகாமில் கோவை சங்கரா கண் மருத்துவ மைய டாக்டர்கள் சுகன்யா, சஞ்சனா ஆகியோர் 275 பேர்களின் கண்களை பரிசோதனை செய்தனர். இதில் 80 பேர் கண் அறுவை சிகிசைக்காக தேர்வு செய்யப்பட்டு கோவை அழைத்து செல்லப்பட்டனர். முகாமில் ரோட்டரி துணை ஆளுனர் சுரேஷ், முன்னாள் தலைவர்கள் அசோக்குமார், சீனி வாசன், உறுப்பினர்கள் மகேந் திரன், ஸ்டாலின், தேவராஜன், தேர்வு தலைவர் துரை கலந்துகொண்டனர்.

