/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம் நோயாளிகள் அவதி
/
செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம் நோயாளிகள் அவதி
செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம் நோயாளிகள் அவதி
செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம் நோயாளிகள் அவதி
ADDED : டிச 23, 2025 07:12 AM

கள்ளக்குறிச்சி: பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் 4வது நாளாக கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவனையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எம்.ஆர்.பி., செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கடந்த 18ம் தேதி முதல் சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் செவிலியர்களிடம் நடத்திய பேச்சு வார்த்தையில், 723 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, பொங்கலுக்கு முன் சீனியாரிட்டி அடிப்படையில் பணி ஆணை வழங்கப்படும் என தெரிவித்தார்.
தமிழகம் முழுதும் 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட எம்.ஆர்.பி., செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் செவிலியர்கள் 4வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு நடந்த போராட்டத்திற்கு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்க நிர்வாகி பவானி தலைமை தாங்கினார். எம்.ஆர்.பி., செவிலியர்களின் தொடர் போராட்டத்தால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். பணியில் உள்ள செவிலியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.

