/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால் காந்திஜி சாலையில் போக்குவரத்து நெரிசல்

ADDED : டிச 22, 2025 06:15 AM
ஈரோடு: ஈரோடு காந்திஜி ரோட்டில் ஜவுளி, செல்போன் கடை என ஏரா-ளமான வணிக கடை செயல்பட்டு வருகிறது. தவிர தலைமை தபால் நிலையம், பி.எஸ்.என்.எல்., அலுவலகம், வங்கிகள் என பொதுத்துறை நிறுவனங்களும் உள்ளன. இங்கு நாள்தோறும் நுாற்-றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இவ்வாறு வருவோர் தங்கள் டூவீலர், கார்களை, சாலையை ஆக்கிரமித்தும், சாலையோ-ரத்திலும் நிறுத்தி செல்கின்றனர். இதனால் சாலை அடைபட்டு, போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
இப்பகுதியில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தக்கூடாது என போலீசார் எச்சரிக்கை போர்டு வைத்துள்ளனர். ஆனாலும் வாகன ஓட்டிகள் அந்த போர்டுக்கு அருகிலேயே வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். விதி மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். அப்போதுதான் காந்திஜி சாலையில் போக்கு-வரத்து நெரிசல் ஏற்படுவது முடிவுக்கு வரும் என்று, மக்கள் தெரி-வித்துள்ளனர்.