/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிராம உதவியாளர் தேர்வு ஒத்திவைப்பால் ஏமாற்றம்
/
கிராம உதவியாளர் தேர்வு ஒத்திவைப்பால் ஏமாற்றம்
ADDED : டிச 22, 2025 06:14 AM
அந்தியூர்: ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் மூலம், கிராம உதவியாளர் தேர்வு பணிக்கான அறிவிப்பு செப்டம்பரில் வெளியானது. அந்-தியூர் மற்றும் பவானி தாலுகாவில், பல்வேறு பிரிவுகளில், 3,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இதற்கான எழுத்து தேர்வு டிச.,21ம் தேதி என அறிவிக்கப்பட்டது.
பவானி தாலுகாவுக்கு பருவாச்சி தனியார் பள்ளி, அந்தியூர் தாலுகாவுக்கு மங்களம் நகர் தனியார் பள்ளியில் தேர்வுவெழுத ஹால் டிக்கெட் அனுப்பினர். இதனால் அந்தியூர் மங்களம் நகர் பள்ளி, பருவாச்சி தனியார் பள்ளியில், விண்ணப்பதாரர்கள் நேற்று குவிந்தனர்.இதையறிந்து சென்ற வருவாய் துறையினர், தேர்வு தற்காலிக-மாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டதாக கூறி வீட்டுக்கு செல்ல அறிவுறுத்தினர். இதனால் தேர்வெழுத வந்தவர்கள் ஏமாற்-றத்துடன் திரும்பி சென்றனர்.
இதுகுறித்து அந்தியூர் தாசில்தார் இளஞ்செழியன் கூறியதாவது:
மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு, அந்தந்த தாசில்-தாரால் நியமிக்கப்படும் கிராம உதவியாளர் தேர்வு இன்று (நேற்று) நடப்பதாக இருந்தது. நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து, விண்ணப்பித்தவர்க-ளுக்கு குறுஞ்செய்தியாகவும், போனில் அழைத்து கூறினோம்.
ஆனால், மொபைல் அழைப்பை ஏற்காதவர்கள், மெசேஜ் பார்க்-காதவர்கள் தேர்வெழுத வந்தனர். அவர்களிடம் விபரத்தை சொல்லி அனுப்பினோம்.
இவ்வாறு கூறினார்.

