/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காளைமாட்டு சிலை பகுதியை 'பார்' ஆக்கிய குடிமகன் விரட்ட சென்ற போலீசார் 'எஸ்கார்டான' கொடுமை!

ADDED : செப் 24, 2024 02:56 AM
ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே, காளை மாட்டு சிலை ரவுண்டானா உள்ளது. இங்குள்ள காளை மாட்டு சிலையின் கீழ், நேற்று மதியம், 2:30 மணியளவில் குடிமகன் ஒருவர் அமர்ந்து மது குடித்தார். நீண்ட நேரமாகியும் எழுந்து செல்லாததால், அப்பகுதி கடைக்காரர்கள், சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் குடிமகனை எழுப்பி, போகுமாறு அறிவுறுத்தினர். நகர மறுத்ததுடன் போலீஸ் உயரதிகாரிகள், அமைச்சர், முன்னாள் அமைச்சர்கள் பெயரை சரியாக குறிப்பிட்டார்.
இதனால் சுதாரித்த போலீசார், ஆசாமியிடம் நைசாக பேசி சாலையோரம் அழைத்து சென்று அமர வைத்தனர். திருப்பி திருப்பி விசாரித்ததில், அவர் பெயர் சக்திவேல் என்பதை மட்டுமே அறிய முடிந்தது. அதீத
போதையால் மேற்கொண்டு விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதேசமயம் குடிமகனால் மக்களுக்கு, பொது சொத்துக்கு சேதம் ஏற்படாமலிருக்க, போலீசாரும் செய்வதறியாமல் பாதுகாப்பாக நின்றனர். இதை அப்பகுதி கடைக்காரர்கள் புரிந்து கொண்டு பார்க்க, சாலை வழியே சென்ற மக்கள் புரியாமல் பார்த்தபடி, கடந்து சென்றனர். மாலை, ௬:௩௦ மணியளவில் போதை தெளிய, ஆசாமியே எழுந்து சென்றார். இதையடுத்து
போலீசாரும் அங்கிருந்து கிளம்பினர்.