/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சொந்த ஊர் கிளம்பிய வெளி மாநில போலீஸ்
/
சொந்த ஊர் கிளம்பிய வெளி மாநில போலீஸ்
ADDED : ஏப் 21, 2024 02:02 AM
ஈரோடு:ஈரோடு
மாவட்ட தேர்தல் பணிக்காக குஜராத்தில் இருந்தப, 360 ஆயுதப்படை
போலீசார், ஆந்திராவில் இருந்து, 100 போலீசார், 600 ஊர் காவல்
படையினர், கேரளாவில் இருந்து, 100 போலீசார் என, 1,160 பேர் வந்தனர்.
நேற்று முன்தினம் ஓட்டு பதிவு முடிந்தவுடன், பணி விடுவிப்பு ஆணையை
ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலகத்தில் நேற்று பெற்றனர்.
இதையடுத்து ஈரோட்டில் இருந்து மதியம் தங்கள் சொந்த ஊருக்கு
கிளம்பினர். குஜராத் போலீசார், கர்நாடகாவில் நடக்கும் லோக்சபா
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக செல்கின்றனர்.
இதேபோல் தேர்தல்
போலீஸ் கண்காணிப்பாளர், நேற்று முன்தினம் இரவு தேர்தல் பாதுகாப்பு
பணி நிறைவு செய்த பின், சொந்த ஊர் கிளம்பி சென்றார். தேர்தல் செலவின
பார்வையாளர்களும், சொந்த ஊர் புறப்பட்டனர்.

