/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொப்பரை நிறுவனத்தில் வருமான வரி சோதனை
/
கொப்பரை நிறுவனத்தில் வருமான வரி சோதனை
ADDED : செப் 18, 2025 03:02 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி - முத்துார் செல்லும் சாலையில், 'மேரிகோ லிமிடெட்' நிறுவனம், பாராசூட் என்ற பெயரில், தேங்காய் எண்ணெய் விற்பனை செய்கின்றனர். இதை மெய்யழகன் என்பவர் கவனிக்கிறார்.
நேற்று காலை, 6:00 மணிக்கு இரண்டு கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், 10 பேர், 'மேரிகோ லிமிடெட்' கொப்பரை கொள்முதல் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
நேற்று சோதனையின்போது, வெளியாட்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதுபோல் உள்ளே இருந்து யாரும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அங்குள்ள ஆவணங்களை சரி பார்த்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
பாதுகாப்புக்காக ஆயுதப்படை காவலர் ஒருவர் மட்டும், துப்பாக்கியுடன் நிற்க வைக்கப்பட்டுள்ளார். வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடக்கிறது.