ADDED : செப் 11, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு ;தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மாநில ஒருங்கிணைப்பாளர் ரகு தலைமையில், ஈரோடு, திண்டல், துணை இயக்குனர் (சுகாதாரம்) அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சுகாதார ஆய்வாளர்கள் நிலை-2 பணியிடங்களை உடன் நிரப்ப வேண்டும். அல்லது வரும் மழைக்காலங்களில் டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்றுக்களை கட்டுப்படுத்துவதில் ஆபத்து ஏற்படும்.
சுகாதார ஆய்வாளர் நிலை-1, வட்டார சுகாதார மேற்பார்வையாளர், மேற்பார்வையாளர், மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர், மாவட்ட நலக்கல்வியாளர் போன்ற பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த வேண்டும். நிரந்தர பயணப்படி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தினர்.