ADDED : செப் 11, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம் தாராபுரம் பகுதியில் மக்காச்சோளம், நெல், பருத்தி மற்றும் காய்கறி பயிர் விதைகள், உரிமம் பெற்ற அரசு மற்றும் தனியார் உதவி விற்பனை நிலையங்கள் மூலம் விற்கப்படுகிறது. தரம் குறைந்த விதைகள் விற்கப்படுவதாக அவ்வப்போது புகார் எழுந்து வருகிறது.
இந்நிலையில் தரம் குறைந்த விதைகள் விற்பது கண்டறியப்பட்டால், விதைகள் சட்டப்படி விற்பனையாளர் மற்றும் விதை உற்பத்தி நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதிஎச்சரித்துள்ளார்.