/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சின்னாபின்னமாக கிடக்கும் சிறுவர் பூங்கா
/
சின்னாபின்னமாக கிடக்கும் சிறுவர் பூங்கா
ADDED : டிச 15, 2025 06:22 AM

கோபி; கோபி, வேட்டைக்காரன்கோவில் அருகே இந்-திரா நகரில், படகு இல்லத்துடன் கூடிய செங்-குட்டை ஏரி பகுதியை ஒட்டி சிறுவர் பூங்கா உள்-ளது. தினமும் காலை, 9:30 மணி முதல், மாலை, 5:00 மணி வரை பூங்கா திறந்திருக்கும். நுழைவு கட்டணமாக சிறியவர்களுக்கு ஐந்து ரூபாயும், பெரியவர்களுக்கு, 10 ரூபாய் வசூலிக்கின்றனர். ஏரியில் இயந்திர படகில் சவாரியும் நடக்கிறது. பூங்கா பயன்பாட்டில் இருந்தாலும், இங்குள்ள விளையாட்டு உபகரணங்கள், உடைந்து, சேதம-டைந்தும் உள்ளன. இதனால் சிறுவர்கள், விளை-யாட வழியின்றி ஏமாற்றம் அடைகின்றனர்.
பூங்கா வளாகத்தில் விவசாயத்தை பறை-சாற்றும் வகையில் மரத்தாலான மாட்டு வண்டி நிறுவப்பட்டுள்ளது. பூங்காவுக்கு வருவோர் இதன் மீதேறி செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டதால், முக்கிய பாகங்கள் உடைந்து சேத-மடைந்துள்ளது. கோபி யூனியன் நிர்வாகம் பூங்-காவை முறையாக பராமரிக்க, கோரிக்கை எழுந்-துள்ளது.

