நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: சிங்காரக்கோட்டை களத்துவீட்டை சேர்ந்த ராமசாமி 59, திண்டுக்கல் செட்டியபட்டி மகேஸ்வரி 47 இடையே முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில் ராமசாமி வீட்டிற்கு மகேஸ்வரி, அவரது உறவினர்கள் சென்றனர். அங்கு தனியே இருந்த அவரது மகள் சாரதாபிரியாவிடம் தகராறு செய்து தாக்கினர்.
படுகாயமடைந்த சாரதாபிரியா திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாக்கிய மகேஸ்வரி உள்ளிட்ட 4 பேரை வடமதுரை போலீசார் தேடி வருகின்றனர்.

