/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நடவடிக்கை எடுக்காததற்கு நன்றி கூறி போஸ்டர்
/
நடவடிக்கை எடுக்காததற்கு நன்றி கூறி போஸ்டர்
ADDED : டிச 25, 2025 06:28 AM
வடமதுரை: வடமதுரை பத்திரப் பதிவு அலுவலகத்தில் 14 ஆண்டுகளாக நிரந்தர சார்பதிவாளர் இல்லை. வெவ்வேறு ஊர்களில் பணிபுரிவோர் மாற்று பணியாக வந்து செல்கின்றனர். 7 நாட்களில் தர வேண்டிய மேனுவல் வில்லங்க சான்று ஆண்டுக்கணக்கில் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதால் உயரதிகாரிகளுக்கு மனு தந்தும் தீர்வு கிடைக்கவில்லை.
இங்கு பாதிக்கப்பட்டோர் நுாதன முறையில் போஸ்டர்கள் மூலம் அவ்வப்போது சிரமத்தை வெளிப்படுத்துகின்றனர். வடமதுரை பகுதியில் அக்கப்போர் இயக்கம்' சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் திராவிட மாடல் ஆட்சியில் பத்திரப்பதிவு அலுவலகம் குறித்து ஊழல் தடுப்பு அதிகாரிகளிடம் புகார் தந்தும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருக்கும் அதிகாரிகளுக்கு நன்றிகள் பல குறிப்பிட்டுள்ளனர்.

