ADDED : டிச 26, 2025 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரை மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் வளாகம் ஐயப்பன் சன்னதியில் பொன்ஆபரண தர்மசாஸ்தா அறக்கட்டளை சார்பில் 55ம் ஆண்டு மண்டல பூஜை நடந்தது.
பால்கேணி மேட்டில் இருந்து 27 சைவ, வைணவ கோயில் புனித தீர்த்தங்கள் ரத வீதிகள் வழியே ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. 108 சங்கபிேஷகம் , 18 படி, கோ, யாக வேள்வி பூஜைகள் நடந்தது. பக்த ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன் நடத்தி வைத்தார். அறக்கட்டளை தலைவர் ராமதாஸ், செயலாளர் நந்தக்குமார், பொருளாளர் இளங்கோ , ஐயப்ப சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.

