/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு அலுவலகங்களை தரைதளங்களுக்கு.. மாற்றலாமே !மேல் தளத்தில் இருப்பதால் முதியோர் அவதி
/
அரசு அலுவலகங்களை தரைதளங்களுக்கு.. மாற்றலாமே !மேல் தளத்தில் இருப்பதால் முதியோர் அவதி
அரசு அலுவலகங்களை தரைதளங்களுக்கு.. மாற்றலாமே !மேல் தளத்தில் இருப்பதால் முதியோர் அவதி
அரசு அலுவலகங்களை தரைதளங்களுக்கு.. மாற்றலாமே !மேல் தளத்தில் இருப்பதால் முதியோர் அவதி
ADDED : டிச 26, 2025 05:48 AM

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டத்தில் வங்கிகள், போஸ்ட் ஆபீஸ்கள், அரசு அலுவலகங்கள் ஒரு சிலவற்றை தவிர்த்து மற்றவை தரைதளத்தில் இல்லாமல் முதல் ,இரண்டாம் தளங்களில் செயல்படுவதால்
முதியோர்கள் , மாற்றுத் திறனாளிகள் எளிதில் செல்ல முடியாமல் அவதிப்படுவதால் மக்கள் அதிகம் வந்து செல்லும் இந்த
அலுவலகங்களை தரைதளத்திற்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் ஏராளமான வங்கிகள், போஸ்ட் ஆபிஸ்கள் ,அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. பல வங்கிகள் முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் செயல்பட்டு வருகின்றன.
இதேபோல் குறிப்பிட்ட சில போஸ்ட் ஆபீஸ்கள் ,அரசு அலுவலகங்கள் மாடியில் செயல்பட்டு வருகிறது. தற்காலத்தில் வங்கி சேவையை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். வங்கிக் கடன், பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட பல சேவைகளுக்கு வங்கிகளை நாட வேண்டியுள்ளது.
தரை தளத்தில் வாடகை அதிகம் கொடுக்க வேண்டும் என்பதால் செலவினத்தை குறைப்பதற்காக பல வங்கிகள் மாடிகளில் செயல்பட்டு வருகின்றன. முதியோர்கள் , மாற்றுத் திறனாளிகள் மாடியில் உள்ள வங்கிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்களும் எளிதில் மாடிக்குச் செல்ல முடிவதில்லை. இதேபோல் மாடிகளில் செயல்படும் போஸ்ட் ஆபீஸ்கள், அரசு அலுவலகங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
இந்த அலுவலகங்களின் சேவைகளை பெற பிறரை சார்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. இவர்கள் எளிதில் சென்று வர வசதியாக தரை தளங்களில் அலுவலகங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

