/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு
/
முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு
ADDED : செப் 13, 2025 04:07 AM

திண்டுக்கல்: கார்த்திகை நட்சத்திர நாளில் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று அபிராமி அம்மன் கோயிலுள்ள ஆறுமுகப் பெருமான் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனைகள் நடந்தன. ரயிலடி சித்தி விநாயகர் திருக்கோயிலுள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துக்கு பின் தீபாராதணை நடைபெற்றது. பால தண்டாயுதபாணி சுவாமிக்கும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
கந்தக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி, என்.ஜி.ஓ., காலனி முருகன் கோயில், மேட்டுராஜக்காபட்டி சுப்ரமணிய சுவாமி, பாதாள செம்பு முருகன், குள்ளனம்பட்டி சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சின்னாளபட்டி : சதுர்முக முருகன் கோயிலில் மூலவர் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், சதுர்முக முருகனுக்கு, சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. சிவசுப்பிரமணியருக்கு வெள்ளி கவசம், ராஜ அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. தருமத்துப்பட்டி சுப்பிரமணிய சுவாமி காரமடை ராமலிங்க சுவாமி கோயிலிலும் கார்த்திகை சிறப்பு அபிஷேகம் நடந்தது.
நத்தம் : திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. கோயிலை சுற்றி சுவாமி புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் விளக்கேற்றி வழிபட்டனர். நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தண்டபாணி சன்னதி , வேம்பார்பட்டி பாலமுருகன் கோயில்,குட்டூர் அண்ணாமலையார் கோயில் முருகப்பெருமான் சன்னதியிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.