/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பருவ மழை முறையாக பெய்யாததால் மானாவாரி விவசாயம்... பாதிப்பு: கால்நடைகளுக்கான தீவனம் இல்லாமல் விற்கும் விவசாயிகள்

ADDED : செப் 13, 2025 04:06 AM

மாவட்டத்தில் பெரும்பாலான விவசாய நிலங்கள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் மானாவாரி நிலங்களாகவே உள்ளன. சித்திரை, வைகாசியில் பெய்யும் மழையை நம்பி நிலத்தில் வெறும் உழவு செய்து போட்டு வைத்திருப்பர்.
ஆனி, ஆடி மாத பருவமழை பெய்ய துவங்குவதால் ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப விவசாயிகள் உழவு தொழிலில் ஆர்வம் காட்டுவர். கிணறு,போர்வெல் நீர் பிடிப்புள்ள நிலங்களை தவிர பெரும்பாலான மாணவாரி நிலங்களில் நிலக்கடலை, கம்பு, சோளம், கொள், எள், மொச்சை, தட்டைப்பயிறு உள்ளிட்ட பயிர் வகைகளை பயிரிடுவர். ஆவணி முடிய உள்ள நிலையில் மகசூல் எடுக்க துவங்கி விடுவர்.
தற்போது இயற்கை கூட விவசாயிகளுக்கு கை கொடுக்க வில்லை. சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி என தொடர்ந்து நான்கு மாதங்களாக மழை பெய்ததற்கான அறிகுறியே இல்லை.
ஆவணியில் தான் ஒரு சில இடங்களில் ஒரு நாள், இரண்டு நாள் மழை பெய்துள்ளது. இந்த மழையை நம்பி எந்த விவசாய பணிகளிலும் ஈடுபட முடியாது என்பதால் விவசாயிகள் வெறுமனே காத்து உள்ளனர்.
காய்கனி, பயிர் வகைகள், உணவுப் பொருட்களின் அனைத்து விலைவாசிகளும் உயர்ந்துவிட்ட நிலையில் பருவமழை பொய்த்து போய் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் இன்னும் விலைவாசி அதிகரிக்கும் என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பருவ மழை இல்லாத நிலையில் கால்நடைகளுக்கான தீவன பற்றாக்குறையால் விவசாயிகள் தங்களது கால்நடைகளையும் வளர்க்க முடியாமல் விற்கும் நிலைக்கு ஆளாகி வருகின்றனர்.