/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நங்காஞ்சியாறு தடுப்பணையில் கழிவுநீர் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார்
/
நங்காஞ்சியாறு தடுப்பணையில் கழிவுநீர் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார்
நங்காஞ்சியாறு தடுப்பணையில் கழிவுநீர் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார்
நங்காஞ்சியாறு தடுப்பணையில் கழிவுநீர் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார்
ADDED : செப் 20, 2025 04:28 AM

திண்டுக்கல்: ''-நங்காஞ்சியாறு தடுப்பணையில் கழிவுநீர் கலப்பதாக'' விவசாயிகள் முறையிட்டனர்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குநர் பாண்டியன், தோட்டகலைத்துறை துணை இயக்குநர் காயத்திரி, நேர்முக உதவியாளர்(வேளாண்மை) நாகேந்திரன் கலந்து கொண்டனர்.
கொப்பறை கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், கால்நடை கிளை மருத்துவமனை வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகள் 44 மனுக்கள் அளித்தனர். இதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது
விவசாயிகள் விவாதம்... ராமசாமி, விவசாயிகள் சங்க மாவட்ட செயலர்: குளத்தில் வண்டல் மண் அள்ள வருவாய் அதிகாரிகள் உடனடியாக அனுமதி தருவதில்லை. தாமதம் செய்கின்றனர்.
கலெக்டர்: உடனடியாக அனுமதி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏதும் நிலுவையில் இருந்தால் இப்போதே அனுமதிக்க கூறுகிறேன்.
செல்லம், தும்பலப்பட்டி: மஞ்சளாறு அணையில் கழிவு நீர் கலக்கிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அணையை மேட்டூர் அணை போல் வளைவாக கட்டினால் தண்ணீர் அதிகளவில் தேக்கி தண்ணீர் பஞ்சம் வரமால் தடுக்க முடியும்.
பரமசாமி, நிலக்கோட்டை : புல்வெட்டி குள நீர் வரத்து திட்டத்தினை செயல்படுத்தக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
ராஜேந்திரன், ஒட்டன்சத்திரம்: நங்காஞ்சியாறு தடுப்பணையில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு உள்ளது. கழிவுநீர் சுத்திரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். புதிய காய்கறி மார்கெட்ட் அருகிலும் கழிவுநீர் தேங்கி மக்கள், வாகன ஓட்டிகள் அவதிபடுகின்றனர்.
வீரப்பன், குஜிலியம்பாறை: பல்வேறு குளங்களில் இரவு, பகலாக மணல் அள்ளி கோவை, ஈரோடு பக்கம் கொண்டு சென்று விற்கின்றனர். சின்னக்குளத்திலும் அதிகளவில் மண் அள்ளுகின்றனர்.
அப்துல்கலாம், ஆத்துார்: ஆத்துார், நிலக்கோட்டை, அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தென்னை உள்ளது. கொப்பறை கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகேந்திரன், நேர்முக உதவியாளர்: வேளாண் விற்பனை ஒழுங்கு முறை கூடத்தில் விவசாயிகள் ஒன்று கூடினால் வியாபாரிகளை வரவழைத்து கொள்முதலுக்கான ஏற்பாடுகளை செய்யலாம்.
கந்தசாமி, விவசாயி, மிடாப்பாடி: திண்டுக்கல் - கோவைக்கான பைபாஸ் ரோடு பணிகள் முடிந்து விட்டன. ஆனால் மணல், சிமென்ட் போன்ற பொருட்களை நெடுஞ்சாலைத்துறையினர் அப்படியே விட்டுச்சென்று விட்டனர். ஆக்கிரமிப்பாக இருக்கிறது. இதனால் தோட்டத்திற்கு 2 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது.
கலெக்டர்: சம்மதப்பட்ட துறையினரிடம் அறிவுறுத்தி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.