/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோயில் சொத்துக்கள் கோயில்களுக்கே வி.ஹெச்.பி., கருத்தரங்கத்தில் வலியுறுத்தல்
/
கோயில் சொத்துக்கள் கோயில்களுக்கே வி.ஹெச்.பி., கருத்தரங்கத்தில் வலியுறுத்தல்
கோயில் சொத்துக்கள் கோயில்களுக்கே வி.ஹெச்.பி., கருத்தரங்கத்தில் வலியுறுத்தல்
கோயில் சொத்துக்கள் கோயில்களுக்கே வி.ஹெச்.பி., கருத்தரங்கத்தில் வலியுறுத்தல்
ADDED : செப் 20, 2025 04:28 AM

பழநி: ''கோயில்களின் சொத்துக்கள் கோயில்களுக்கு சொந்தமானவை'' என வி.ஹெச்.பி., அகில பாரத இணை பொதுச் செயலாளர் கோ.தாணுமாலயன் பேசினார்.
ஹிந்து ஆலயங்களின் வருமானம் ஹிந்துக்களின் நலனுக்கே என்ற தலைப்பில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பழநியில் நடந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது:
ஹிந்து சமய சொத்துக்களான கோயில்கள், திருமடங்களை பாதுகாக்க வேண்டும். ஹிந்துக்களை காப்பாற்ற ஹிந்து குடும்ப கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும். கோயில்களின் சொத்துக்கள் கோயில்களுக்கு சொந்தமானவை.
கோயில் நிர்வாகத்தில் கிடைக்கும் வருமானம் ஹிந்து சமுதாயத்திற்கு உபயோகப்பட வேண்டும்.
கோயில்களை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க உறுதியளிக்கும் கட்சிகளுக்கு ஓட்டளிக்க வேண்டும். சின்ன தாராபுரத்தில் கோயிலில் சுவாமி கும்பிடுவதற்கு பிரச்னை ஏற்படுகிறது என தினமலர் நாளிதழில் செய்தி வந்துள்ளது. ஹிந்துக்களை பிரிக்க கட்சிகள் பல்வேறு செயல்களை செய்து வருகின்றன.அயோத்தியிலுள்ள ராமர் கோயிலை நிர்வாகிக்க அறக்கட்டளை உள்ளது போல்ஹிந்து கோயில்களை பராமரிக்க மாநில அளவில் நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., துறவிகள் என ஹிந்துக்களை கொண்ட குழு அமைக்க வேண்டும். இது போல் மாவட்டம் ,கோயில் அளவில் குழுக்கள் அமைத்து கோயில்களை நிர்வகிக்க வேண்டும் என்றார்.
நகர தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மத்திய அரசு வழக்கறிஞர் ஸ்ரீ ராம அருண்சுவாமிநாதன், சித்தநாதன் சன்ஸ் விஜயகுமார், கந்த விலாஸ் பாஸ்கரன், வி.ஹெச்.பி., மாநில தலைவர் ராமகிருஷ்ணன், மாநில இணை அமைப்பாளர் கோவிந்தராஜ், திருக்கோயில் திருமடங்கள் மாநில அமைப்பாளர் செந்தில்குமார், பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் திருமலைசாமி,வி.ஹெச்.பி., மாவட்டச செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட இணைச் செயலாளர் சுதாகர், துணைத் தலைவர் முருகேசன் கலந்து கொண்டனர்.