/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோயில் இடம் ஆக்கிரமிப்பு: அமைச்சர் மீது புகார்
/
கோயில் இடம் ஆக்கிரமிப்பு: அமைச்சர் மீது புகார்
ADDED : டிச 23, 2025 04:23 AM
திண்டுக்கல்: ஹிந்து கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஓட்டுனர் சங்கம் மூலம் எம்.எல்.ஏ., முதல் முதல்வர் வரை அதிகாரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார் புகார் அளித்துள்ளார்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது : திண்டுக்கல் மாவட்டம் கீழக்கோட்டை கிராமத்தில் ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் ,பகவதி அம்மன் கோயிலுக்கு சொந்தமாக 10 ஏக்கர் 38 சென்ட் உள்ளது.இந்த இடம் சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று அறநிலையத்துறைக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.
ஆனால் தற்போது வரை வருவாய் துறை பட்டா வழங்கவில்லை. அமைச்சர் பெரியசாமி, எம்.எல்.ஏ., செந்தில்குமார், அப்பகுதி தி.மு.க., நிர்வாகிகள் இணைந்து ஐ.பி.எல்., சுற்றுலா வேன் கார் ஓட்டுநர் உரிமையாளர் சங்கம் என்ற பெயரில் பலகை வைத்து கோயில் இடத்தை அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி ஆக்கிரமித்துள்ளனர்.இந்த ஆக்கிரமிப்பை அகற்றி இடத்தை மீட்க வேண்டும் என கேட்டுள்ளார்.

