/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் அதிர்வுடன் பலத்த வெடிச்சத்தம்; மிரண்டு ஓடிய கால்நடைகள்; அச்சத்தில் மக்கள்
/
திண்டுக்கல்லில் அதிர்வுடன் பலத்த வெடிச்சத்தம்; மிரண்டு ஓடிய கால்நடைகள்; அச்சத்தில் மக்கள்
திண்டுக்கல்லில் அதிர்வுடன் பலத்த வெடிச்சத்தம்; மிரண்டு ஓடிய கால்நடைகள்; அச்சத்தில் மக்கள்
திண்டுக்கல்லில் அதிர்வுடன் பலத்த வெடிச்சத்தம்; மிரண்டு ஓடிய கால்நடைகள்; அச்சத்தில் மக்கள்
UPDATED : டிச 17, 2025 12:57 AM
ADDED : டிச 16, 2025 11:34 PM
வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, எரியோடு, வேடசந்துார், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் பகுதியில் நேற்று காலை 9:38 மணிக்கு அதிர்வுடன் பலத்த வெடிச்சத்தம் கேட்டது. கால்நடைகள் ஓடின.
வடமதுரை, வேடசந்துார், சாணார்பட்டி, திண்டுக்கல் பகுதிகளை மையமாக கொண்டு அவ்வப்போது பகல் நேரங்களில் மட்டும் பலத்த வெடிச்சத்தம் கேட்பது 8 ஆண்டுகளாக தொடர்கிறது. அவரவர் இருக்கும் இடத்தில் இருந்து அரை கி.மீ., துாரத்தில் கேட்பது போல தெரிந்தாலும் 20 முதல் 40 கி.மீ., சுற்றளவில் இந்த வெடிச்சத்தம் கேட்கிறது. பல நேரங்களில் கடும் அதிர்வும் உணரப்படுகிறது.
வடமதுரையில் நேற்று காலை 9:38 மணிக்கு இந்த பலத்த வெடிச்சத்தம் கேட்டது. எரியோடு, திண்டுக்கல், வேடசந்துார் ஒட்டன்சத்திரம் சுற்றுப்பகுதியிலும் இச்சத்தம் கேட்டது. நுாற்றுக்கணக்கான கிராமங்களில் அதிர்வும் உணரப்பட்டது. கால்நடைகள், நாய்கள் அலறியடித்து ஓடின.
இந்த வெடிச்சத்தம் குறித்த கேள்விக்கு, ஆய்வு நடக்கிறது' என மட்டும் சில ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் பதிலாக தரப்படுகிறது. ஆய்வு முடிவு இது வரை வெளியிடப்படவில்லை.
மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன் கூறியதாவது: அதிர்வுடன் கூடிய வெடிச்சத்தம் குறித்து விசாரணை நடத்தப்படும். பொதுவாக இதுமாதிரியான திடீர் நில அதிர்வு, வெடிச்சத்தம் குறித்து ஆராய்ச்சி செய்ய புவியியல் ஆராய்ச்சி சிறப்புக்குழுக்கள் உள்ளன. கல்குவாரிகளில் வரன்முறைப்படுத்தப்பட்ட அளவிலே வெடிமருந்துகள் பயன்படுத்தி பாறைகள் உடைக்கப்படுவதால் இந்த அளவுக்கு சத்தமோ, நில அதிர்வோ ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இருப்பினும் காரணம் குறித்து ஆய்வு செய்யப்படும், என்றார்.

