/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சுகாதார வளாகம் கட்ட பூமி பூஜை
/
சுகாதார வளாகம் கட்ட பூமி பூஜை
ADDED : டிச 16, 2025 06:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: சாணார்பட்டி, மடூர் ஊராட்சி புகையிலைப்பட்டி புனித பிரிட்டோ நடுநிலைப்பள்ளியில், எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் கட்ட பூமி பூஜை விழா நடந்தது.
இதற்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். ஜெ., பேரவை மாநில இணைச்செயலாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் ராமராசு, சுப்பிரமணி, மாவட்ட ஜெ.பேரவை இணைச் செயலாளர் சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட வர்த்தக அணி பொருளாளர் ஹரிஹரன், ஒன்றிய ஜெ.பேரவை இணைச்செயலாளர் விஜயன் கலந்து கொண்டனர்.

