/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காந்திகிராம பல்கலையில் ஆய்வாளர்களுக்கு விருது
/
காந்திகிராம பல்கலையில் ஆய்வாளர்களுக்கு விருது
ADDED : செப் 10, 2025 08:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி; காந்திகிராம பல்கலையில் கல்வியியல் துறை ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் சார்பில் ஆசிரியர் தின சிறந்த ஆய்வாளருக்கான விருது வழங்கும் விழா நடந்தது. துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார்.
துறை தலைவர் ஸ்ரீதேவி வரவேற்றார். முன்னாள் துணைவேந்தர் குழந்தைவேல், பேராசிரியர் மீனாட்சி, பொறுப்பு பதிவாளர் சுந்தரமாரி பேசினர். ஆய்வாளருக்கான விருது, சமூக அறிவியல், அறிவியல், மொழிகள் புலம், சிறந்த ஆய்வு இதழ்களை வெளியிட்ட பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் பக்தவத்சல பெருமாள் நன்றி கூறினார்.