ADDED : செப் 13, 2025 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் அரசு கலை கல்லுாரியில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் ராஜாராம் முன்னிலை வகித்தார்.செந்துறை அரசு ஆரம்ப சுகாதார நம்பிக்கை மைய ஆலோசகர் மீனா விழ்ப்புணர்வு ஏற்படுத்தினார். தமிழ் துறை தலைவர் தண்டபாணி வழி நடத்தினார். வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் அமுதா ஏற்பாடு செய்தார்.