ADDED : செப் 19, 2025 02:17 AM
திண்டுக்கல்: ''தமிழகத்தில் 2026ல் அ.தி.மு.க., பொதுசெயலாளர் பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைவது உறுதி'' என முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேசினார்.
2026 சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க., ஒன்றிய, நகர, பேரூராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள பூத் கிளைகள் மூலம் செயல்படுத்தப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது:
2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். பொதுச்செயலாளர் பழனிசாமி மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்பார்.தொண்டர்கள் மிகவும் திறம்பட செயலாற்றி மீண்டும் அ.தி.மு.க.,ஆட்சி அமைய பாடுபடவேண்டும்.
இந்த தேர்தலில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் திறம்பட செயலாற்ற வேண்டும் என்றார். பூத் கிளைகள் மூலம் செயல்படுத்தப்பட வேண்டிய பணிகள் குறித்து நிர்வாகிகள் பயிற்சிக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., பொறுப்பாளராக மாணிக்கம், கவி செல்வம் தங்கம், சி.என்.ஆர். செல்வகுமார் நியமிக்கப்பட்டனர்.கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் தர்மராஜ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாரதி முருகன், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, வி.டி.ராஜன், பி.ஜி.எம்.டி.முரளி, இக்பால், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி வீரமார்பன் ,கலைப்பிரிவு செயலாளர் ரவிக்குமார், பங்கேற்றனர்.