/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
37 இடங்களில் தாமதமாக தொடங்கிய ஓட்டுப்பதிவு
/
37 இடங்களில் தாமதமாக தொடங்கிய ஓட்டுப்பதிவு
ADDED : ஏப் 20, 2024 05:52 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் மாதிரி ஓட்டுப்பதிவின் போது ஏற்பட்ட இயந்திரக் கோளாறுகளால் 37 இடங்களில் தாமதாமாக ஓட்டுப்பதிவு தொடங்கியது.
திண்டுக்கல் தொகுதிக்கான ஓட்டுப்பதிவு 1812 ஓட்டுச்சாவடிகளில் நடந்தது. ஓட்டுச்சாவடிகளில் அதிகாலை 5:30 மணிக்கே மாதிரி ஓட்டுப் பதிவு நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய, 7:00மணிக்கு ஓட்டுபதிவு துலங்கியது . அதன்படி 37 ஓட்டச் சாவடிகள் தவிர பிற இடங்களில் திட்டமிட்டப்படி காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.ஓட்டுப்பதிவு இயந்திர கட்டுப்பாட்டுக் கருவியில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாக 13 இடங்கள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் எழுந்த குறைபாடுகளால் 7, உறுதி செய்யும் கருவியில் ஏற்பட்ட பாதிப்புகளால் 17 இடங்கள் என 37 இடங்களில் 15 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை ஓட்டுப்பதிவு தாமதமாக தொடங்கியது.

