/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஜாக்டோ ஜியோ சார்பில் வேலை நிறுத்த மாநாடு
/
ஜாக்டோ ஜியோ சார்பில் வேலை நிறுத்த மாநாடு
ADDED : டிச 28, 2025 08:28 AM
தர்மபுரி: ஜாக்டோ ஜியோ சார்பில், காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாடு, தர்மபுரி சி.ஐ.டி.யு., அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுருளிநாதன், கவுரன், ஆனந்தன், பாஸ்கரன், சாமிநாதன், பழ-னியப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமி-ழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் காமராஜ் உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இதில், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு டெட் தேர்விலிருந்து விலக்களித்து ஆசிரியர்களை பாதுகாக்க, தமிழ்நாடு அரசு சீராய்வு மனு உள்ளிட்ட நடவ-டிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரி-யர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் 2உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 2026 ஜன., 6 முதல் ஜாக்டோ ஜியோ சார்பில் நடக்கவுள்ள வேலைநி-றுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரி-யர்கள் பெருமளவில் பங்கேற்ற வேண்டும் என, முடிவெடுக்கப்பட்டது.

