/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 871 பேருக்கு பணி நியமன ஆணை
/
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 871 பேருக்கு பணி நியமன ஆணை
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 871 பேருக்கு பணி நியமன ஆணை
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 871 பேருக்கு பணி நியமன ஆணை
ADDED : டிச 21, 2025 06:50 AM
தர்மபுரி: தர்மபுரி அடுத்த சோகத்துாரில், மாவட்ட நிர்-வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. இதில், மாற்றுத்திறனாளிகள் உட்பட, 2,838 பேர் பங்கேற்றனர். பெங்களுரு, சென்னை, கோவை, திருச்சி, கிருஷ்ணகிரி, சேலம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 137 முன்னணி தொழில் நிறு-வனங்கள் கலந்து கொண்டன. இதில், 5 மாற்றுத்-திறனாளிகள் உட்பட, 871 பேருக்கு பணி நியமன ஆணையை மாவட்ட கலெக்டர் சதீஸ் வழங்-கினார்.
இதில், தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி, நகராட்சி சேர்மன் லட்சுமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தீபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.