/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 318 பேர் 'ஆப்சென்ட்'
/
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 318 பேர் 'ஆப்சென்ட்'
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 318 பேர் 'ஆப்சென்ட்'
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 318 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : மார் 27, 2024 04:15 PM
தர்மபுரி: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இதில், 318 மாணவ மாணவிகள் ஆப்சென்ட் ஆகினர்.
தமிழகம் முழுவதும் நேற்று, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. தர்மபுரி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, 94 தேர்வு மையங்களில் நடந்தது. இதில், 225 அரசு பள்ளிகள், 89 தனியார் பள்ளிகளை சேர்ந்த, 21,330 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், 21,012 பேர் மட்டும் தேர்வெழுத வந்திருந்தனர். இதில், 318 மாணவ, மாணவிகள் ஆப்சென்ட் ஆகினர். மேலும், தேர்வில் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
தீ பிடித்து எரிந்த வீடு உதவித்தொகை வழங்கல்
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார், காந்தி நகரை சேர்ந்தவர் ரவிசந்திரன். இவரது மனைவி சாந்தி. கூலி தொழிலாளி. இவர்கள் ஓட்டு வீட்டில் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் மதியம், வீட்டில் தாய் அம்மணியம்மாளை விட்டு விட்டு, உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வெளியூர் சென்று விட்டனர். அப்போது, அம்மணியம்மாள் காஸ் அடுப்பில் சமையல் செய்தபோது, எதிர்பாராத விதமாக தீ பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் அம்மணி அம்மாளை மீட்டனர். பின் தீயை அணைத்தனர். இருந்த போதிலும் தீ பரவி வீடு முழுவதும் தீக்கிரையானது.
அரசு சார்பில் கடத்துார் வி.ஏ.ஓ., சுரேஷ், நிவாரண உதவித்தொகையாக, 5,000 ரூபாய், உணவு பொருட்களை நேற்று சாந்தியிடம் வழங்கினார்.

