/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாக்காளர் சிறப்பு முகாம் : கலெக்டர் ஆய்வு
/
வாக்காளர் சிறப்பு முகாம் : கலெக்டர் ஆய்வு
ADDED : டிச 28, 2025 06:11 AM

புவனகிரி: புவனகிரி பகுதியில் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமை கலெக்டர் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடந்து முடிந்தது, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், புவனகிரி தொகுதியில் 39 ஆயிரத்து 15 பேர் நீக்கப்பட்டுள்ளனர். ஆண்கள் 11 லட்சத்து 19 ஆயிரத்து 62 பேரும், பெண்கள் 11 லட்சத்து 15 ஆயிரத்து 49 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 19 பேர் என 22 லட்சத்து 35 ஆயிரத்து 30 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று துவங்கிய சிறப்பு முகாமில் பெயர் சேர்த்தல், திருத்தத்திற்கு பலர் விண்ணப்பித்தனர். கீழ்புவனகிரி - நடுநிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சாத்தப்பாடி தொடக்கப் பள்ளிகளில் நடந்த முகாமை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேரில் ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

