ADDED : டிச 23, 2025 04:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: எம்.ஜி.ஆர் நினைவு தினத்தில், கட்சியினர் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்த வேண்டும் என பாண்டியன் எம்.எல்.ஏ.,தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 38 ம் ஆண்டு நினைவு தினம் வரும், 24ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது.
அன்றைய தினம், கடலுார் கிழக்கு மாவட்டத்தின், ஒன்றிய, நகர பேரூராட்சி, கிளை, வார்டு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் எம்.ஜி.ஆர், உருவ சிலைகள் மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும்.
நிகழ்ச்சிகளில் மாநில, மாவட்ட, சார்பு அணி நிர்வாகிகள் ஒன்றிய நகர பேருராட்சி வார்டு மற்றும் கிளை கழக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் திரளாக பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

