/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
100 நாள் வேலை திட்டம் :கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
/
100 நாள் வேலை திட்டம் :கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை திட்டம் :கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை திட்டம் :கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 23, 2025 04:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே, 100 நாள் வேலை திட்டத்தை முறையாக வழங்க கோரி, கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கோ.மாவிடந்தல் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராம மக்கள் நேற்று ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, 100 நாள் வேலை திட்ட பணியை பாகுபாடின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும்; 10 ஆண்டுகளுக்கு மேல் பணியில் இருக்கும் பணிதள பொறுப்பாளரை மாற்ற வேண்டும்; எனக்கூறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பேச்சுவார்த்தைக்கு யாரும் வராததால், அவர்கள் கலைந்து சென்றனர்.