/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தெய்வீக பக்தர்கள் பேரவை கோரிக்கை
/
தெய்வீக பக்தர்கள் பேரவை கோரிக்கை
ADDED : டிச 20, 2025 06:38 AM
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் விழாவில், சுவாமியை மறைத்து கொண்டு செல்லக்கூடாது என தெய்வீக பக்தர்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, பேரவை நிறுவன தலைவர் ஜெமினி ராதா, அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிற்கு மனு அனுப்பினார். அதில் கூறியிருப்பதாவது:
வரும் 25ம் தேதி, மார்கழி மாத, ஆருத்ரா தரிசன விழா துவங்குகிறது. 10 நாட்கள் நடக்கும் விழாவில், ஜன., 2ம் தேதி தேர், 3 ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. நடராஜர் - சிவகாமசுந்தரி தேரில் இருந்து, கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே செல்லும் போது, வழிநெடுகிலும், பக்தர்கள் தீபாராதனை எடுத்து வணங்கும் நடைமுறை பல நுாற்றாண்டு காலமாக இருந்து வருகிறது.
இந்த, ஆருத்ரா தரிசன விழாவின் போது, சுவாமியை வலது புறம் மட்டும், துணியால் திரையிட்டு மறைத்து துாக்கி கொண்டு செல்லும் நடைமுறையை கைவிட்டு, பக்தர்கள் வழிபட உரிய நடவடிக்கை எடுத்து, மனித வழிபாட்டு உரிமையை பாதுகாக்கவேண்டும்.
தரிசன விழா நடைபெறும் 4 நாட்களும், கனக சபை மீதேறி தரிசனம் செய்ய தடை விதிக்க கூடாது என பொது தீட்சிதர்களுக்கு மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் அறநிலையத் துறையும் அறிவுறுத்தி பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

