/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுடன் ஆலோசனை
/
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுடன் ஆலோசனை
ADDED : டிச 19, 2025 06:28 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவங்க விவசாயிகளுடன், கருத்துகேட்பு ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில், ஆலையின் செயல் ஆட்சியர் செந்தில்அரசன் தலைமை தாங்கினார்.
தலைமை பொறியாளர் ரவிக்குமார், கணக்கு அலுவலர் ரமேஷ்பாபு, துணை தலைமை ரசாயன பொறியாளர் செல்வேந்திரன், விவசாய சங்க நிர்வாகிகள் தேவதாஸ் படையாண்டவர், முத்துசாமி, பழனிமனோகரன், அண்ணாதுரை, திருப்பால், மதியழகன், இளவரசன் மற்றும் விவசாயிகள் முன்னிலை வகித்தனர்.
தலைமை கரும்பு அலுவலர் ரவிகிருஷ்ணன் வரவேற்றார்.
இதில் விவசாயிகள் தரப்பில், கரும்பு ஏற்றி வரும் வாகனங்களின் வாடகையை 20 சதவீதம் உயர்த்த வேண்டும்; விதை கரும்பிற்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதற்கு பதில் அளித்த ஆலை செயல் ஆட்சியர் செந்தில்அரசன், ஆலையின் அதிகார சட்டத்திற்குட்பட்டு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.
அலுவலக மேலாளர் முருகன் நன்றி கூறினார்.

