தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கணக்கீடு பணிக்கு எதிர்ப்பு கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

 கணக்கீடு பணிக்கு எதிர்ப்பு கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

 கணக்கீடு பணிக்கு எதிர்ப்பு கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்


ADDED : டிச 19, 2025 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 19, 2025 06:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மந்தாரக்குப்பம்: என்.எல்.சி., சுரங்க விரிவாக்கப்பணிக்கு கணக்கீடு மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம் நடந்தது.

மந்தாரக்குப்பம் என்.எல்.சி., குடியிருப்பு பகுதிகளில் அருகே உள்ள பெரியார் நகர், ஐ.டி.ஐ., நகர், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை, இரண்டாம் சுரங்க விரிவாக்கப்பணிக்காக கணக்கெடுக்கும் பணி கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது.

இந்நிலையில் கெங்கைகொண்டான் பேரூராட்சிக்கு அருகே உள்ள சிவாஜிநகர், என்.எல்.சி., குடியிருப்பு பகுதிகளில் கணக்கீடு பணிக்காக நேற்று முன்தினம் அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்றனர்.

அப்போது வர்த்தக சங்க நிர்வாகிகள், அரசியல் கட்சியினர், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் வருவாய்துறையினரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து துணை தாசில்தார் ராஜதுரை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இது தொடர்பாக உயர் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் மற்றும் வி.ஏ.ஒ.,க்கள் கணக்கீடும் பணியை கைவிட்டு திரும்பி சென்றனர்.

இந்நிலையில், கணக்கீடு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து நான்குமுனை சந்திப்பு, சிவாஜிநகர், கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடு மற்றும் கடைகளில் நேற்று காலை கருப்புக் கொடி கட்டி பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us