/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்
/
காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்
ADDED : மே 21, 2024 05:31 AM

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகம் முன்பு, குடிநீர் வசதி கேட்டு கருங்குழி கல்லாங்குளம் கிராம மக்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வடலுார் கருங்குழி அடுத்த கல்லாங்குளம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு, 14 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், குடிநீர் வசதி செய்து தர வேண்டும், தெரு விளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துக் கொடுக்க கோரி, கல்லாங்குளம் கிராமத்தை சேர்ந்த மக்கள், கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அப்போது அவர்கள், காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலுார் புதுநகர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. அதையடுத்து, போராட்டத்தை கைவிட்ட மக்கள், கலெக்டரை சந்தித்து மனு அளித்துவிட்டு சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

