/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'புகைபழக்கம் கைவிட இளைஞர்கள் முயற்சி'
/
'புகைபழக்கம் கைவிட இளைஞர்கள் முயற்சி'
ADDED : டிச 31, 2025 05:01 AM
கோவை: மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு துறை சார்பில், 60 நாட்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு பிரசாரம் நிறைவு பெற்றுள்ள சூழலில், புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட இளைஞர்கள் முயற்சிப்பதாக, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய துணை இயக்குனர் டாக்டர் சரண்யா தெரிவித்தார்.
டாக்டர் சரண்யா கூறுகையில், ''விழிப்புணர்வு பிரசாரம் நிறைவு பெற்றாலும், கண்காணிப்பு பணிகள் தொடரும். பொது இடங்களில் புகைப்பிடித்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். விழிப்புணர்வு செயல்பாடுகளின் போது, 35-40 வயதினர் இப்பழக்கத்தில் இருந்து வெளிவர முயற்சிப்பதை பார்த்தோம்.
ஆனால், 50 வயதுக்கு மேற்பட்ட முதியோர் புகையிலை, வெற்றிலை போடும் பழக்கத்தை விட வைப்பது என்பது சவாலான காரியமாக உள்ளது. இருப்பினும் தொடர்ந்து விழிப்புணர்வு, கண்காணிப்பு பணிகள் நடக்கும்,'' என்றார்.

