/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மோசடி வழக்கில் சி.எஸ்.ஐ., பிஷப் கோர்ட்டில் ஆஜர்
/
மோசடி வழக்கில் சி.எஸ்.ஐ., பிஷப் கோர்ட்டில் ஆஜர்
ADDED : டிச 31, 2025 05:01 AM
கோவை: மோசடி வழக்கில், சி.எஸ்.ஐ., பிஷப், கோவை கோர்ட்டில் ஆஜரானார்.
ரேஸ்கோர்சில், சி.எஸ்.ஐ. திருமண்டல திருச்சபை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.கோவை, ஈரோடு, திருப்பூர், மற்றும் நீலகிரி மாவட்டங்களிலுள்ள 100 க்கும் மேற்பட்ட சி.எஸ்.ஐ., தேவாலயங்கள், இத்திருச்சபையால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
திருமண்டல திருச்சபையில், 2009ம் ஆண்டில், ஏழு லட்சம் ரூபாய் முறைகேடு நடந்து இருப்பதாக புகார் அளிக்கப்பட்டது. கோவை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கையில், வெளிநாட்டிலிருந்து பெற்ற நிதியில் பலகோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக, அப்போதைய பிஷப் மாணிக்கம் துரை, திருச்சபை நிர்வாகத்தை சேர்ந்த மூர்த்தி, மணிகண்டன், தனபால், அமிர்தம், பிரின்ஸ் கால்வின், ஜோஸ்வா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவர்கள் மீது, கோவை சி.ஜே.எம்., கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, தற்போதைய பிஷப் பிரின்ஸ்கால்வின், ஜோஸ்வா ஆகியோர் ஆஜராகினர். வழக்கை வரும் 29க்கு ஒத்திவைத்து, நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டார்.

