/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவு அரைக்கும் இயந்திரம் வாங்கவும் மானியம் தர்றாங்க
/
மாவு அரைக்கும் இயந்திரம் வாங்கவும் மானியம் தர்றாங்க
மாவு அரைக்கும் இயந்திரம் வாங்கவும் மானியம் தர்றாங்க
மாவு அரைக்கும் இயந்திரம் வாங்கவும் மானியம் தர்றாங்க
ADDED : செப் 19, 2025 09:24 PM
கோவை; மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, உலர் மாவு அரைக்கும் இயந்திரங்கள் வாங்க, 50 சதவீத மானியம் வழங்குகிறது சமூக நலத்துறை.
கலெக்டர் பவன்குமார் அறிக்கை:
வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, 10,000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் இயந்திரங்களை வாங்க, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் 5,000 ரூபாய் மானியம் வழங்கப்படும்.
கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயனடைய விரும்பும் மகளிர், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவராக இருப்பது அவசியம்.
25 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.1.20 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என, தெரிவித்துள்ளார்.