/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூரிய மின்னுற்பத்தி சந்தேகமா; 70 ஸ்டால்களில் தீர்வு இருக்கு
/
சூரிய மின்னுற்பத்தி சந்தேகமா; 70 ஸ்டால்களில் தீர்வு இருக்கு
சூரிய மின்னுற்பத்தி சந்தேகமா; 70 ஸ்டால்களில் தீர்வு இருக்கு
சூரிய மின்னுற்பத்தி சந்தேகமா; 70 ஸ்டால்களில் தீர்வு இருக்கு
ADDED : செப் 11, 2025 11:26 PM
குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை பயன்பாடுகளுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வது, விளக்குகள், குளிர்விப்பு மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், உலகம் முழுவதும் சோலார் ஆற்றலின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மத்திய அரசின் முயற்சியால், சோலார் பயன்பாடு, பொதுமக்கள் மத்தியில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெரிய, பெரிய தொழிற்சாலைகள், சோலார் பயன்பாட்டை முன்னெடுக்கத் துவங்கி விட்டன. மின் கட்டண செலவை பாதியாக குறைக்கும் வகையில், தொழிற்சாலைகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, 'குளோபல் சோலார் எக்ஸ்போ', கோவை கொடிசியா அரங்கில் நேற்று துவங்கியது. இன்றும் நடக்கிறது.
வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவையான சோலார் பேனல், சோலார் மின்சாரத்தை சேகரித்து வைக்கும் பேட்டரிகள், மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான சார்ஜ் ஏற்றும் வசதி உபகரணம், சூரிய சக்தியில் இயங்கும் பம்ப்புகள் வாயிலாக விவசாயத்துக்கு நீர் பாய்ச்ச உதவுவது போன்ற உபகரணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 70க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம் பெற்றிருந்தன.
வணிக, தொழில் மற்றும் வீட்டு பயனாளர்கள், சோலார் நிறுவனங்களை நேரடியாக சந்தித்து, தங்கள் திட்டம் குறித்து விளக்கி சந்தேகங்களுக்கு தீர்வு ஏற்படுத்திக் கொண்டனர். நிதியாளர்கள், முதலீட்டாளர்கள், பயன்பாட்டு நிறுவனத்தினர் பங்கேற்றனர்.