/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம்
/
மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம்
ADDED : செப் 11, 2025 10:13 PM

அன்னுார்; தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், மாநிலம் தழுவிய நியாயம் கேட்கும் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நேற்று நடந்தது. இதில் கோவில்பாளையம், அன்னுார், பகுதியில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு, பிரசாரம் நடந்தது.
அன்னுார் பஸ் ஸ்டாண்டில், சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் இன்னாசி முத்து பேசுகையில், தி.மு.க., அரசு பென்சனர்களுக்கு துரோகம் இழைக்கிறது. அ.தி.மு.க., ஆட்சியில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மூன்று முறை உயர்த்திய பிறகு 2000 ரூபாயாக அதிகரித்தது. ஆனால் இந்த ஆட்சியில் நான்காண்டுகள் ஆகியும் ஒரு ரூபாய் கூட உயர்த்தப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்றம் 3,850 ரூபாய் பென்ஷன் வழங்க உத்தரவிட்டும் தீர்ப்பு அமல்படுத்தப்படவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தீவிர போராட்டம் நடத்தப்படும், என்றார்.
இதில் ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் வீரபத்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாண்டியராஜன், செயலாளர். உதயகுமார், மாநில பொருளாளர் ஆனந்தவல்லி உள்பட பலர் பங்கேற்றனர்.