/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு; பெருமாள் கோவில்களில் சிறப்பு ஏற்பாடு

ADDED : செப் 19, 2025 09:23 PM

கோவை; புரட்டாசி முதல் சனிக் கிழமையையொட்டி, கோவையில் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
புரட்டாசி மாதம் மகா விஷ்ணுவுக்கு உகந்த மாதம். இம்மாதத்தில் வழிபட துவங்கினால், பாவங்கள் நீங்கி, நன்மைகள் பெருகும்; பெருமாளின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாக புரட்டாசியில் பெருமாளுக்கு விசேஷ வைபவங்கள் நடைபெறுகின்றன.
கோவை பெரிய கடை வீதியில் உள்ள லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி, உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில்களில், இன்று அதிகாலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது.
19 வகையான நறுமண வாசனை திரவியங்களால், சேர்க்கப்பட்ட புனிதநீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. உற்சவருக்கும், மூலவருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. முன்னதாக திருப்பள்ளி எழுச்சி, வேதபாராயணம், நாலாயிர திவ்யபிரபந்தம், பாராயணம் செய்யப்படுகிறது.
இதேபோல், நகரில் உள்ள பிற பெருமாள் கோவில்களிலும், பக்தர்கள் இன்று புரட்டாசி வழிபாடு நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.